tamilnadu

img

சரியாக மாடு மேய்க்கவில்லையாம்... மாவட்ட ஆட்சியரை சஸ்பெண்ட் செய்தது உ.பி. பாஜக அரசு!

லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலத்தில், தெருவில் திரியும் பசுமாடுகளைப் பராமரிப்பதற்கு, ரூ. 200 கோடி நிதி ஒதுக்கி, 750மாட்டுக் கொட்டங்களை (கோசாலைகள்) அம்மாநில முதல்வர் ஆதித்யநாத் அமைத்துள்ளார். மேலும், இந்த மாட்டுக் கொட்டங் கள் பராமரிப்பு வேலையை, மாவட்ட ஆட்சியர்களிடம் ஒப்படைத்துள்ள ஆதித்யநாத், சரியாக வேலை செய் யாத அதிகாரிகளுக்கு தண்டனையும் வழங்கி வருகிறார். 3 மாதங்களுக்கு முன்பு பிரயாக்ராஜ் பகுதியிலுள்ள கோசாலையில் 35 பசுமாடுகள் நோயால் இறந்து போனதற்காக, 8 அதிகாரிகளை முதல்வர் ஆதித்யநாத் சஸ்பெண்ட் செய்தார். இனிமேலும், பசு பராமரிப்பில் அலட்சியம் காட்டினால், கால்நடைப் பராமரிப்புச் சட்டத்தின் கீழ், குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில்தான், மஹாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள மத் வாலியா கோசாலையை சரியாகப் பராமரிக்கவில்லை என்று கூறி, அந்த மாவட்டத்தின் ஆட்சித்தலைவரையே, முதல்வர் ஆதித்யநாத் தற்போது பணியிடை நீக்கம் செய்துள்ளார்.மத்வாலியா கோசாலையில் சுமார்2500 பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருவதாக ஆவணங்களில் உள்ள நிலையில்,சோதனையில் வெறும் 954 பசுக்கள்மட்டுமே இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில், மஹாராஜ் கஞ்ச் மாவட்ட ஆட்சியர் அமர்நாத் உபாத்யாயா மட்டுமன்றி, மாவட்ட துணை ஆட்சியர் சத்யம் மிஸ்ரா, முன்னாள் துணை ஆட்சியர் நிச்லால் தேவேந்திர குமார் மற்றும் கால்நடை துறை அதிகாரிகள் 3 பேரும் பணியிடை நீக்கம்செய்யப்பட்டு இருப்பதாக, உத்தரப்பிரதேச அரசின் தலைமைச் செயலாளர் ஆர்.கே. திவாரி கூறியுள்ளார்.

 

;